தொண்டர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு... இன்று தவெக தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்!

 
விஜய்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தேர்தல் வியூகத்தை வகுத்து வருகின்றன. தொகுதி பங்கீடு,கூட்டணி கட்சிகள் சேர்க்கைநடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரசாரத்தை வேகப்படுத்த தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தவெக விஜய்

அந்த வகையில், த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் இன்று  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள 12 உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

தவெக விஜய் டெல்லி கார்

இந்த கூட்டத்தில் இலவசங்கள் இல்லாத அரசியல், மக்கள் குறைகளை தீர்க்கும் வழிகள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!