தவெக தலைவர் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு அமல்!

 
விஜய்

நடிகர் விஜய் 2024 பிப்ரவரியில்  தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து  தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு அவர் பயணம் செய்ய இருக்கும் நிலையில்  விஜய்க்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் நிலவி வந்தது. இந்நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

விஜய்

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விஜய்க்கு 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர். 

விஜய்

தற்போது வெளிநாட்டு பவுன்சர்கள் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளில் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.  இனி  வரும் நாட்களில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் விஜய் இருப்பார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web