தவெக விருப்ப மனு சமர்ப்பிக்கும் தேதி பிப்ரவரி 20 வரை நீட்டிப்பு!

 
விஜய்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். ஏற்கனவே பிப்.14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

234 தொகுதிகளிலும் வேட்பாளராக நிற்க விரும்புவோர் மனுவைப் பெறவும் சமர்ப்பிக்கவும் இன்று வரை மட்டுமே அவகாசம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக பலரால் குறிப்பிட்ட காலக்கெடுவில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, மனு தாக்கல் செய்யும் காலம் வரும் பிப்.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள் தலைமை நிலையச் செயலகத்தில் நேரடியாக விருப்ப மனுவை சமர்ப்பிக்கலாம் என்றும், அதுவே இறுதி நாள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!