தவெக தலைவர் விஜய் புதுச்சேரி ரோடுஷோ ரத்து... தொண்டர்கள் ஏமாற்றம்!

 
விஜய்
 

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் நடத்த திட்டமிட்டிருந்த சாலைவலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் முழு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இரண்டு முறை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து சாலை அகலமாக உள்ள 1.5 கி.மீ. பகுதியில் ரோடுஷோ  நடத்த அனுமதி கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்ததால் சாலைவலம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுக்கூட்டத்தை மட்டும் நடத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், முழு பயணத்தையும் விஜய் ரத்து செய்துள்ளதால் புதுச்சேரி தவெக தொண்டர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!