தவெக தேர்தல் அறிக்கை… மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் அறிவிப்பு!

 
தவெக

 தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் முன்னேற்றமும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் இலக்காகக் கொண்டு, “மக்களுக்கான அறிக்கை மக்களிடமிருந்தே உருவாக வேண்டும்” என்ற அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் கருத்துகளை நேரடியாக அறிந்துகொள்ள மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வளர்ச்சித் தேவைகள், சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற உள்ளன.

தவெக விஜய்

இதுகுறித்து விஜய் வெளியிட்ட பதிவில், தேர்தல் அறிக்கைக்கான கூடுதல் தரவுகளை சேகரிக்கும் நோக்கில் இந்த சுற்றுப் பயணம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பயணத்தின் அட்டவணை மற்றும் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தவெக தலைமை அறிவித்துள்ளது.தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி மதுரையில் தெற்கு மண்டல கூட்டம் நடைபெறுகிறது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பங்கேற்கின்றன.

தவெக விஜய்

பிப்ரவரி 4-ல் கடலூரில் கிழக்கு மற்றும் தென்கிழக்குக் கடற்கரை மண்டல கூட்டமும், பிப்ரவரி 7-ல் கோவையில் மேற்கு மண்டல கூட்டமும் நடைபெறுகிறது. பிப்ரவரி 9-ல் திருச்சியில் மத்திய மண்டலமும், பிப்ரவரி 11-ல் சென்னையில் வடக்கு மண்டல கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சுற்றுப் பயணத்தின் போது பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழில் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்கப்படும். மக்கள் கருத்துப் பெட்டி மற்றும் டிஜிட்டல் முறையிலும் கருத்துகள் பெறப்படும். பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என தவெக தலைமை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!