விசில் சின்னம் அறிமுகம்.... கப்பு முக்கியம் பிகிலு.... விஜய் உற்சாகம் !
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தீவிரமான தயாரிப்பில் உள்ளது. கடந்த சில நாட்களாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வந்த நிலையில், இன்று மாமல்லபுரத்தில் தனியார் மண்டபத்தில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் கழுத்தில் விசில் சின்னத்தை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய விஜய், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மீது விமர்சனம் வெளியிட்டபோதே, த.வெ.க. கொள்கை தலைவர்களில் ஒருவரான ராணி வேலு நாச்சியாரின் வரலாறு கூறி தொண்டர்களை ஊக்குவித்தார். தனித்து போட்டியிடினால் வெற்றி பெறுவோம் என்றும், அழுத்தம் கொடுத்து தன்னை அடிபணிய வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தனது கையில் இருந்த விசிலை ஊதியபடி, “பிகில்” திரைப்படத்தின் பிரபல வசனமான ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்ற வார்த்தைகளை உச்சரித்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேடையில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், என்.ஆனந்த் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளும் இணைந்து விசில் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
