நடுரோட்டில் பெட்ரோல் தீ சாகசம்… ரீல்ஸ் எடுத்த தவெக தொண்டருக்கு போலீஸ் வலைவீச்சு!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சக்திவேல் (25). இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் பைக் ரேஸ் மற்றும் சாகச ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்டதாக ஏற்கெனவே அவர் மீது வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், தவெக கட்சி கொடி மற்றும் துண்டுகளை பயன்படுத்தி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். நேற்று சென்னை–பெங்களூரு அதிவிரைவுச் சாலையில் காவேரிப்பாக்கம் அருகே 3 பைக்குகளை நிறுத்தி நண்பர்களுடன் ரீல்ஸ் எடுத்தார். சாலையின் நடுவே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தும், வாயில் பெட்ரோல் ஊற்றி தீப்பந்தம் உருவாக்கியும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளை பதிவு செய்தார்.
மேலும் கட்சி துண்டை தலையில் கட்டி, கொடியை கையில் பிடித்தபடி பைக் மீது நின்று 200 மீட்டர் வரை அதிவேகமாக சென்றார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து மாவட்ட எஸ்பி மயில்வாகனனுக்கு புகார் சென்ற நிலையில், அவரது உத்தரவின் பேரில் பள்ளிகொண்டா போலீசார் சக்திவேல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
