விஜய் தவெக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் முதல் விருப்ப மனுவை கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் ரூ.100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றனர்.

தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் இன்று முதல் மனு விநியோகம் தொடங்கியது. விருப்ப மனுக்களை பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பெற முடியும் என்று கட்சி அறிவித்துள்ளது. நாளை முதல் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனுவில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனுடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
