வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு… பூஜையுடன் பணிகள் தொடக்கம்!

 
விஜய்

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வேலூரில் நடத்தவுள்ள மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கான பணிகள் இன்று காலை பூஜையுடன் தொடங்கின. சேலத்தைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23) இந்த கூட்டம் நடைபெற உள்ளது. 33 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நடைபெறும் கூட்டத்துக்காக அதிகாலை பந்தகால் நட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.

விஜய்

ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் இந்த கூட்டத்திற்கு தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 25 ஆயிரம் பேர் வரலாம் என கட்சி நிர்வாகிகள் கணித்துள்ளனர். இதற்காக காவல்துறை அனுமதி கோரி மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

தவெக விஜய்

வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றுள்ளது. எழுத்துப்பூர்வ விளக்கங்கள் கேட்டு காவல்துறை அறிக்கையும் வழங்கியுள்ளது. கட்சியினர் அளிக்கும் விளக்கங்களைப் பொருத்தே அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. கூட்ட நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை; சென்னை முதல் வேலூர் வரை விஜய் சாலை வழியாக பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!