விஜய் குட்டிக்கதை... வாக்காளர்களை யாரும் ஏமாற்ற முடியாது!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் கட்சித் தலைவர் விஜய் தொண்டர்கள் முன்பு பேசினார். உரையைத் தொடங்கிய அவர், கோயில் யானையை பற்றிய குட்டிக் கதையை கூறி தனது பேச்சை ஆரம்பித்தார்.

ஒரு ஊரில் இருந்த கோயில் யானையை ஒருவர் தேங்காயில் சுண்ணாம்பு வைத்து ஏமாற்றியதாகவும், பின்னர் அதே யானையிடம் வாழைப்பழத்தில் பஞ்சு வைத்து மீண்டும் ஏமாற்ற முயன்றபோது யானை அவரை தும்பிக்கையால் தூக்கி எறிந்ததாகவும் கூறினார். இதன் மூலம் அந்த யானைக்கு நினைவாற்றல் அதிகம் என்பதையும் விளக்கினார்.

இந்த கதையில் யானை என்பது வாக்காளர்கள் என்றும், யாரையும் எளிதில் ஏமாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இங்கு ஒற்றை யானை அல்ல, இரட்டை யானைகள் போன்ற சிங்கப் பெண்கள் இருப்பதால் யாராலும் ஏமாற்ற முடியாது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மகளிருக்கான பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
