விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவாரா ? ஆதவ் அர்ஜுனா பளிச்!

 
ஆதவ் ஆதவ்

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்  தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது. ஆந்திர மாநில துணை முதல்வரும்   ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் , தவெக தலைவர்  விஜய்யை தொடர்பு கொண்டு கூட்டணியில் இணைய அழைத்ததாகவும், 50 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர்  பதவி வழங்கப்படும் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.  

ஆதவ் அர்ஜுனா

இந்த தகவல்கள்  சமூக வலைதளங்களில் பரவியதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தியதாகவும் சில செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து தவெக தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா

செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா  வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என பளிச் பதில் அளித்துள்ளார்.   இதன் மூலம் தவெக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையப்போவதாக பரவிய தகவல்கள் அடிப்படையற்றவை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.   தற்போது தவெக தனித்து தேர்தலை சந்திக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!