தமிழகம் முழுவதும் தவெக 234தொகுதிகளிலும் தனித்து போட்டி... செங்கோட்டையன்!

 
செங்கோட்டையன் செங்கோட்டையன்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும், தேர்தலில் புதிய வரலாறு படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தவெக விஜய்

ஈரோடு நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு குறைபாடுகள் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகளை கட்டுப்படுத்த தவறியதாக திராவிட முன்னேற்றக் கழகம் அரசை கண்டித்தார். மேலும் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

தவெக விஜய்

அப்போது விரைவில் விஜய் ஈரோட்டுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தை தவெக ஆளும் நாளை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார். மேலும் மற்ற கட்சிகள் திமுக குறித்து பேசாமல் விஜயை பற்றியே பேசுகின்றன என்றும், 234 தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!