234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி... தமிழகத்தில் 4 முனைப் போட்டி உறுதி!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எவ்விதக் கூட்டணியும் இன்றி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற கட்சியின் உயர்நிலைச் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். சில தேசியக் கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைக்கப் போவதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “தவெக எக்காலத்திலும் திராவிட மற்றும் பாசிசக் கொள்கைகளுக்கு மாற்றாகவே செயல்படும், தனித்தே களம் காணும்” என நிர்வாகிகளிடையே அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தவெக விஜய்

இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டியாக மாறியுள்ளது. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளதால், வாக்குகள் பெரிய அளவில் பிரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. “நமது கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பிற கட்சிகள் நம்மை அணுகலாம், ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நாம் யாருடைய நிழலிலும் ஒதுங்கப்போவதில்லை” என்று விஜய் தனது தொண்டர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

தவெக

தேர்தல் நெருங்கும் வேளையில், வேட்பாளர் நேர்காணல் பணிகளை விஜய் ஏற்கனவே தொடங்கிவிட்டார். இரண்டாம் கட்டமாகத் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. மகளிர் தின விழாவில் பெண்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற முழக்கத்தை முன்வைத்து தவெக களம் காண்கிறது. பாரம்பரியக் கட்சிகளுக்கு இடையே விஜய்யின் இந்தத் தனித்துப் போட்டி முடிவு, இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘234 தொகுதிகளிலும் 234 விஜய்கள் நிற்பதாக நினைத்து வாக்களியுங்கள்’ என்ற விஜய்யின் தாரக மந்திரம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!