நாளை மறுநாள் தளபதி ஆட்டம் ஆரம்பம்... 110 வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்!

 
தவெக தவெக

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்டது. வரும் மார்ச் 27-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக சுமார் 110 வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து வைத்து, தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்துள்ள த.வெ.க., தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, வடசென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் நேரடியாகக் களம் காண வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்தாலும், முதற்கட்டப் பட்டியல் தயாராகிவிட்டது.

வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 30-ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவும் சூழலில், நான்காவது சக்தியாகத் த.வெ.க. குதிப்பது தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கியுள்ளது. மாமல்லபுரம் கூட்டத்தில் விஜய்யின் பேச்சு எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!