திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 2ம் தேதி விஜய் வேட்புமனுத் தாக்கல்!

 
விஜய் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூர் தொகுதியில் ஏற்கனவே தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) திருச்சி கிழக்குத் தொகுதியில் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.

தவெக விஜய்

திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் தனது மனுவைச் சமர்ப்பிக்கிறார். இதற்காக அன்றைய தினம் காலை சென்னையிலிருந்து வான்வழிப் பயணம் மூலம் திருச்சி வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தேர்தல் அலுவலகத்திற்குச் செல்கிறார். விஜய்யின் வருகையை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஜய் பிரச்சாரம்

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு, திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளில் விஜய் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட உள்ளார். மதிய வேளையில் தொடங்கும் இந்தப் பரப்புரை மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முதன்மை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள விஜய்யைப் பார்க்கத் தொண்டர்களும் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள் என்பதால், காவல்துறையினர் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!