வாகனத்திற்கு வழிவிடுவதில் தகராறு... ஓட்டுநரை சராமாரியாகத் தாக்கிய போதைக் கும்பல்!

 
தவெக தவெக


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, சாலையில் வாகனத்திற்கு வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட சிறு வாக்குவாதம், வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சிறிய சரக்கு ஊர்தியில் (மினி லாரி), பல்வேறு பழக்கடைகளுக்குப் பழங்களை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அடையாள ஒட்டுப்படம் (Sticker) ஒட்டப்பட்ட மகிழுந்தில் (கார்) வந்த ஒரு கும்பல், வழிவிடுவது தொடர்பாக அந்த இளைஞருடன் தகராறில் ஈடுபட்டது.

தவெக

மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த கும்பல், "ஏன் வழிவிட மாட்டாயா?" எனக் கேட்டு அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. தனது மகனைத் தடுத்த தாயையும் பொருட்படுத்தாமல் அக்கும்பல் அநாகரிகமாக நடந்து கொண்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக

மகிழுந்தில் இருந்தவர்கள் யார், அவர்கள் உண்மையில் அந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா அல்லது போதையில் கட்சியின் பெயரைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!