ஸ்டாலின், ரஜினி, விஜய் உட்பட பிரபலங்களின் ”ட்விட்டர் ப்ளூடிக்” நீக்கம்!!

 
ரஜினி ஸ்டாலின்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு தினசரி அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அத்துடன் ஆட்குறைப்பு தொடங்கி தினசரி பல அதிரடி மாற்றங்களையும் செய்து வருகிறார்.  முதலில் குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டுமே எழுத முடியும் என்ற நிலையை மாற்றி அமைத்தார். ப்ளூடிக்கை சப்ஸ்கிரிப்ஷன் சந்தாவாக மாற்றி அறிவிப்பு வெளியிட்டார். முந்தைய நிலவரப்படி பிரபலங்கள் , பத்திரிகையாளர்கள், முக்கிய தலைவர்களுக்கு இலவச ப்ளூ டிக் வழங்கப்பட்டு வந்தது.  

ட்விட்டர்

அதாவது அவர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பதை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர், முதல்வர்,  அரசு அலுவலர்கள், சினிமா பிரபலங்கள், பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், எலோன் மஸ்க் இதனை சந்தாவாக மாற்றி அவர், ப்ளூடிக் வேண்டுபவர்கள் பணம் கொடுத்து  வாங்கிக் கொள்ளவேண்டும் என மாற்றத்தை அறிவித்தார். ஏற்கனவே சந்தா கட்டியவர்கள் ஏப்ரல் 20ம் தேதிக்குள் அதை சந்தா கட்டி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில்  தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் இருக்கும் பல பிரபலங்களின் ப்ளூ டிக் இரவோடு இரவாக டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

BREAKING!  குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!


இந்த பட்டியலில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சிம்பு, கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, குஷ்பூ, பிரகாஷ் ராஜ் உட்பட பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த பிரபலங்கள் சிலர் குழப்பத்தில் உள்ளனர்.  சந்தா கட்டினால் மட்டுமே ப்ளூ டிக் என்ற விவரத்தை சேகரித்த பின் ப்ளூ டிக்கிற்கு பை  சொல்லிவிட்டனர்.  குஷ்பூ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து எலோன் மஸ்கிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.  பிரகாஷ் ராஜ் பாய் பாய் ப்ளூ டிக் என சென்ட் ஆப் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web