ட்விட்டருக்கு புதிய பெண் சிஇஓ!! எலான் மஸ்க் அதிரடி !!

 
எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் CEO தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும், அவர் 6 வாரத்தில் பதவி ஏற்பார் எனவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, ப்ளூ டிக் , ஆரஞ்சு டிக் மாத சந்தா என பல அதிரடி மாற்றங்களை   செய்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிடும் தளமாக இருந்து வந்த ட்விட்டர் வீடியோ அல்லது ஆடியோ கால் செய்யும் வசதியும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  எலான் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் ப்ளூ டிக் கட்டணம், ஆள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.தற்போது அடுத்த அதிரடி  மாற்றமாக டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை அதிகாரியை நியமித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்

அவர் இன்னும் 6 வாரத்தில் பணியை தொடர்வார் எனவும் , அவர் டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை அதிகாரியாக தொடர்வார் எனவும் தெரிவித்துள்ளார். புதிய தலைமை அதிகாரி வந்த பிறகு தான் , வியாபாரம், மென்பொருள் என அனைத்தையும்  மேற்பார்வையிடும் நிர்வாக தலைவராக இருக்க போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web