பகீர் சிசிடிவி காட்சிகள் ...அடுத்தடுத்து ஒரே மாதிரியாக நடந்த 2 விபத்துக்கள்….!

 
ஒரே மாதிரியாக நடந்த 2 விபத்துக்கள்…

மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை. இந்தப்பகுதியில் அடுத்தடுத்து   2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியில்  நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்துடன் மோதாமல் இருப்பதற்காக பாதை மாறி செல்ல முயற்சிக்கிறார். 


இந்நிலையில் இருசக்கர வாகனம் மீது நேரடியாக மோதியதாகவும், அதில் இருசக்கர வாகனத்தின் ஓட்டுனர் உயரத்தில் தூக்கி வீசப்பட்டு விட்டதையும் காணலாம்.  இதே போல்  அப்பகுதியில் வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். 

இந்நிலையில் சாலையில் புரண்டு விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். அப்போது பேருந்தில் இருந்த 48 பயணிகளில் சிலருக்கு கை மற்றும் கால் எலும்புகள் முறிந்தன. இந்நிலையில் சிலர் காயங்களுடன் உயிர் தப்பித்தனர். அது மட்டுமன்றி அதில் பெண்கள் மற்றும் தேர்வு எழுத சென்ற மாணவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது . மேலும் ஒரே பகுதியில் இவ்வாறு தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web