உரசிக்கொண்ட இரு பைக்குகள்... வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்த சோகம்... இளைஞர் பலி!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காலவாய் பகுதியில் வசித்து வருபவர் முகமது அசாருதீன். இவர், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு வாகனத்தின் மீது இவரது வாகனம் உரசிவிட்டது. கீழே இறங்கி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்றிரவு அசாருதீனை அழைத்த, மற்றொரு தரப்பினர் இந்த பிரச்னை குறித்து பேசியுள்ளனர்.
அப்போது அசாருதீன் தனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதிக்கு அழைத்து சென்று தனது நண்பர்கள் 10 பேருடன் வந்துள்ளார். இதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், மோதல் ஏற்பட்டது. இதில், முகமது அசாருதீன் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திய அசார் தரப்பினர் தப்பியோடிவிட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அசாருதீன் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார், அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரபீக் உட்பட 6 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!