நடுரோட்டில் திருமண தரகரை தாக்கிய 2 சிறுவர்கள்!

 
விளாத்திகுளத்தில் மனைவி கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறார்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை அருகே எருதூர் மார்க்கெட் சாலையைச் சேர்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமார் (54). அங்கு திருமணத் தகவல் மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், கோவில்பட்டிக்கு வந்தார். ரயில் நிலையத்தை அடுத்த மூப்பன்பட்டி ஊருணி அருகே நின்றிருந்த அவரை 2 இளஞ்சிறார்கள் பழனி ஆண்டவர் கோயில் தெருவுக்குச் செல்ல வழி கேட்டதுடன், அவதூறாகப் பேசித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் நேற்று கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது