கதறித் துடித்த பெற்றோர்... கிணற்றில் மூழ்கி இரு குழந்தைகள் பலி...விளையாடி கொண்டிருந்த போது சோகம்!

 
கிணறு நீச்சல் மீட்பு


தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே  டி.ஆர்.பஜார் லீஸ் பகுதியில் வசித்து வருபவர்  கூலி தொழிலாளர்கள் சதீஸ், ஷாலினி. இவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இங்குள்ள ஒரு தனியார் நிலத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் நித்தீஸ் , 3 வயதில் பிரணிதா என 2  குழந்தைகள் உள்ளனர்.இவர்களின் வீட்டுக்கு அருகே விவசாயம் செய்வதற்கு ஒரு சிறிய அளவிலான கிணறு உள்ளது.

பிரணிதா

நேற்று பிப்ரவரி 23ம் தேதி பிற்பகல் குழந்தைகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே விளையாட சென்றனர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. 

ஆம்புலன்ஸ்

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் தேடினர். பின்னர் அருகே இருந்த கிணற்றை போய் பார்த்தபோது குழந்தைகள் இருவரும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதனர்.இது குறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இரு குழந்தைகள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 
From around the web