அரைமணி நேரத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்.... பீதியில் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இன்று பிப்ரவரி 22ம் தேதி சனிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஆப்கானிஸ்தானில் பதிவான முதல் நிலநடுக்கம் 4.5 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.20 மணியளவில் 100 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 2 வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.33 மணிக்கு 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரைமணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!