’மீனவர்கள் வலையில் சிக்கிய 2 தங்க மீன்கள்'.. ரூ.1.40 லட்சத்திற்கு ஏலம் எடுத்த வியாபாரி!
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டம் புடி மடக பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மீனவர்களின் வலையில் தங்க நிறத்தில் 2 மீன்கள் சிக்கின. மீனவர்கள் 2 மீன்களை கரைக்கு கொண்டு வந்தனர். ஆண் கச்சடி இனத்தைச் சேர்ந்த இந்த மீன்கள் தங்க நிறத்தில் இருப்பதால் தங்க மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மிகவும் சுவையான மற்றும் மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்களை வாங்க வணிகர்கள் போட்டியிட்டனர். புடி மடக பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி இரண்டு மீன்களையும் ஏலத்தில் ரூ.1.40 லட்சத்திற்கு வாங்கினார். ஏலத்தில் வாங்கிய மீன்கள் கொல்கத்தாவிற்கு ஏற்றுமதி செய்ய வியாபாரி ஏற்பாடு செய்தார். சங்கராந்தி பண்டிகையின் போது மீனவர்களின் வலையில் தங்க மீன்கள் சிக்கி ரூ.1.40 லட்சத்திற்கு ஏலம் போனபோது மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!
