24 மணி நேரத்தில் 2 இந்துக்கள் படுகொலை... வங்க தேசத்தில் தொடரும் வன்முறை!

 
வங்கதேசம்
 

 

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 18 நாட்களில் மட்டும் 6 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மைமன்சிங், ராஜ்பாரி உள்ளிட்ட பகுதிகளில் கும்பல் தாக்குதல்களில் அமிர்த் மண்டல், திபு சந்திர தாஸ் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க போராட்டம்

டிசம்பர் 31ஆம் தேதி பஜேந்திர பிஸ்வாஸ் என்ற காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். புத்தாண்டு தினத்தில் ஷரியத்பூர் பகுதியில் தீ வைத்து கொல்ல முயற்சிக்கப்பட்ட கோகன் சந்திர தாஸ், சிகிச்சை பலனின்றி ஜனவரி 3ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அச்சத்தை அதிகரித்துள்ளன.

வங்க தேச விபத்து

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டு இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். ஜேஷோர் மாவட்டத்தில் பத்திரிகை ஆசிரியர் ராணா பிரதாப் பைராகி துப்பாக்கியால் சுட்டும், கழுத்தறுத்தும் கொல்லப்பட்டார். நர்சிங்டி மாவட்டத்தில் மளிகைக்கடை நடத்தி வந்த மோனி சக்ரவர்த்தி கடையிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!