கடலில் மூழ்கி சிறுமி உட்பட 2 பேர் உயிரிழப்பு!

 
கடல் நீர் மூழ்கி தண்ணீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையில் குளிக்கச் சென்றதில், கடலில் மூழ்கி சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன். ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் காளிஸ்வரி (16), உட்பட சிறுவர், சிறுமிகளை மொட்ட கோபுரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடற்கரையில் இருந்து சற்று தொலைவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த அந்தோணி விஜயன் மற்றும் காளீஸ்வரி ஆகியோர் கடலில்  மூழ்கினர். 

நீரில் மூழ்கி

இந்நிலையில் காளீஸ்வரின் உடல் நேற்று இரவு கரை ஒதுங்கியது. மேலும் ஆட்டோ டிரைவர் உடலும் மொட்ட கோபுரம் அருகே கடலில் பாறைக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரது உடலையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி தருவைகுளம் மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?