நிலச்சரிவில் இருவர் பலி ... புனித யாத்திரை செல்லும் போது சோகம்!

 
கேதார்நாத்
 

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில், மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ளது கேதார்நாத் கோவில். 12 ஜோதிர்லிங்கங்கள் மற்றும் நான்கு சார் தாம் யாத்திரை கோவில்கள் உலக பிரசித்தி பெற்றவை.  

கேதார்நாத்

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதும் இருந்து இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.  அவர்கள் மலைப்பாதை வழியாக ஜங்கிள்சட்டி காட் பகுதியில் காலை 11:00 மணிக்கு  சென்றபோது, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.  அப்போது உருண்டு வந்த பாறைகள் பக்தர்கள், டோலி துாக்குபவர்கள்  மீது விழுந்தன. இதனையடுத்து, பள்ளத்தாக்கில் விழுந்த பக்தர்களை மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகள் உதவியுடன் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.  

கேதார்நாத்

பள்ளத்தில் விழுந்த 5 பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். இதில் காஷ்மீரை சேர்ந்த டோலி துாக்கும் தொழிலாளர்கள் நிதின் குமார், சந்திரசேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குஜராத்தின் பாவ் நகரைச் சேர்ந்த ஆகாஷ் சைத்ரியா என்ற பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது