மழைக்கு மரத்தடியில் ஒதுங்கிய 2 பேர் மின்னல் தாக்கி பலி!

 
மின்னல் தாக்கி பலி


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில்  களமருதூர் கிராமத்தில் வசித்து வருபவர் 72 வயது  முதியவர் ராமர்.  அவரது பேரன் 26 வயது சூர்யா . இவர்  பாலி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம்  மூவரும் மழையில் நனையாமல் இருப்பதற்காக புளியமரத்து அடியில் நின்றிருந்தனர்.  

மின்னல் தாக்கி பலி
அப்பொழுது இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக புளிய மரத்தின் மீது இடி விழுந்துள்ளது இதில், இடிதாக்கி ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம் மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சூர்யா என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ்

இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக   அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web