துரத்தும் சோகம்!! டாஸ்மாக் மதுவை குடித்து அடுத்தடுத்து இருவர் பலி!!

 
சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தமிழகத்தையே குலை நடுங்க வைத்தது. அந்த அதிர்ச்சியும், பரபரப்பும் நீங்கும் முன் அடுத்த சோகம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தால் தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம்  கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் அரசு மதுபான கடை ஒன்று  செயல்பட்டு வருகிறது.

பீர் டாஸ்மாக்

இன்று மே 21ம் தேதி ஞாயிற்றுகிழமை என்பதால் மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் மது விற்பனை நடைபெற்று வந்தது. இந்த பாரில் மதுபானங்களை வாங்கி குடித்த  68 வயது  மீன் வியாபாரி    குப்புசாமி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரை அடுத்து  36 வயது  விவேக் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .

டாஸ்மாக் மதுபான பார்

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அத்துடன் கலெக்டர் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தார். பிளாக் பியரல் எனும் மதுவை அவ்வப்போது கட்டிங், கட்டிங்காக வாங்கி அளவிற்கு அதிகமாக குடித்ததால் இருவரும் உயிரிழந்து விட்டதாக முதல்கட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web