தனியார் வேன் மோதி இரட்டை உயிரிழப்பு, 3 பெண்கள் படுகாயம்...
ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட மண்ணிவாக்கம்–ஆதனூர் சாலையில் நேற்று இரவு தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன், முதலில் இரண்டு மாடுகளை மோதியது. பின்னர் எதிரே வந்த சரக்கு ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த பெண்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பொத்தேரி தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவர் ஆதனூர் ஜவஹர் ரியா நகரை சேர்ந்த ராஜ்குமார் (52) என்பதும், அவர் மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தில் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளார்.

அதேபோல், மாடம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (58) தனது மனைவியுடன் பைக்கில் சென்றபோது வேன் மோதியதில் அவர் உயிரிழந்தார். அவரது மனைவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் நடந்து சென்ற மைதிலி என்ற பெண்ணும் வேன் மோதியதில் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் இரண்டு மாடுகளும் உயிரிழந்தது ஆதனூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
