இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!!

 
தாமோதர கண்ணன் - கவிதாஸ்

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓமாம்புலியூர் ரோடு பகுதியில் வசிப்பவர் 16வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயலட்சுமி. இவரது கணவர் தாமோதர கண்ணன். இவர் சனிக்கிழமை இரவு பொங்கல் விடுமுறையையொட்டி அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் இருந்து தஞ்சை மாவட்டம் வல்லம் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மகள் மினிஷாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார்.

காட்டுமன்னார்கோயில்: ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது|Inshorts

அப்போது சாந்தன் கிராமத்தை சேர்ந்த கவிதாஸ் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் விக்கி ஆகியோர் காட்டுமன்னார்கோவிலில் இருந்து சாந்தன் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீரானந்தபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 55 வயதான தாமோதர கண்ணன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கவிதாஸ் (வயது 21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தாமோதரன் மகள் மினிசா, 19, விக்கி, 19, ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.
காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் கைவரிசை காட்டி வந்த  பலே திருடன் கைது: ₹ 3 லட்சம் பணம் பறிமுதல்|Inshorts

சம்பவ இடத்திற்கு வந்த காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பலத்த காயமடைந்த மினிஷா, விக்கி இருவரும் மேல் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web