வழிப்பறி வழக்கில் கைதான இரண்டு ரவுடிகளுக்கும் கால் முறிவு!

 
வழிப்பறி வழக்கில் கைதான இரண்டு ரவுடிகளுக்கும் கால் முறிவு!

கோவையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகளுக்கும் கால் முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. 

 

கோவை

கோவை மாவட்டம் ரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்தவர் கவுதம் (29). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்த இவர், இரவு பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கவுதமின் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

 

இது குறித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில், செல்போனை பறித்துச் சென்றவர்கள் ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்த அம்புரோஸ் (28), ரத்தின புரி சுப்பையா லே-அவுட் பகுதியை சேர்ந்த லாரன்ஸ்(27) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இது குறித்து போலீசார் கூறுகையில், “கைதான அம்புரோஸ் மீது 9 வழக்குகளும், லாரன்ஸ் மீது 10 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ரவுடிகள் 2 பேரும் கடந்த வாரம்தான் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த உடனேயே தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

இருவரும் கவுதமிடம் செல்போனை பறித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற போது, ரத்தினபுரி மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் 2 பேரின் கால்களும் முறிந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் இப்ராகிம் பாதுஷா மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரவுடிகளிடம் விசாரித்தனர்” என்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web