தடுப்பணையில் மூழ்கி சகோதரிகள் 2 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சோழகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் அஞ்சுகுழிப்பட்டி அருகேயுள்ள தடுப்பணையில், துணி துவைக்க தனது மனைவி மற்றும் இரு குழந்தைகள் மற்றும் உறவினர்களின் குழந்தைகள் இருவருடன் சென்றுள்ளார்.
தடுப்பணையில் துணி துவைத்து முடித்து விட்டு சிறிது தூரத்தில் உள்ள பாறையில் கணவன், மனைவி இருவரும் துணியை காய வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது தடுப்பணை ஓரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் நால்வரும் அடுத்தடுத்து நீருக்குள் சென்று விளையாடியதில் மூழ்கத் துவங்கினர்.
குழந்தைகளின் கூக்குரல் கேட்டு அப்பகுதியில் சென்ற ஒருவர் ஓடி சென்று இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றினார். தங்கராஜூவின் மகள்கள் 12வது படித்து வந்த பேபிஸ்ரீ(17), 6ம் வகுப்பு படித்து வந்த நாகசக்தி(12) ஆகியோர் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர்.
இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!