என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. ராணுவ வீரர்கள் அதிரடி!

 
ஜம்மு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அக்டோபர் 20 அன்று கந்தர்பால் மாவட்டத்தின் ககாங்கிர் பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு திட்ட நிறுவனத்தின் தொழிலாளர்கள் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 24 அன்று, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க்கின் போடபத்ரி பகுதியில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் மற்றும் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.


பயங்கரவாதிகள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை மாடுகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற நசீர் அகமது மற்றும் குல்தீப் குமார் மாயமாகிய நிலையில், இருவரையும் தேட போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சாகிபோரா சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை மாலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதாவது ராணுவம், துணை ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.

அதன்படி நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோபூரில் இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த இடத்தில் 2க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!