தெலங்கானாவில் முதல்வர் குறித்து அவதூறு வீடீயோ வெளியிட்ட 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

 
பெண்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்கள் அவதூறு வீடியோ வெளியிட்டதாக கூறி ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் 2 பெண் பத்திரிக்கையாளர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெலங்கானா மாநிலத்தில் பல்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் இயக்குநர் பொகாதாநந்தா ரேவதி, செய்தியாளர் பந்தி சந்தியா (எ) தன்வி யாதவ் மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்திலுள்ள 'நிப்புகொடி' எனும் பக்கத்தின் உரிமையாளர் உட்பட 3 பேரின் மீது தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவு செயலாளர், முதல்வர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக காவல் துறையினரிடம் புகாரளித்தார்.

தெலுங்கு தெலங்கானா தெலுங்கானா

இது குறித்து அவர் அளித்திருந்த புகாரில், “பல்ஸ் டிவி நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் தெலங்கானா முதல்வர் குறித்து அவதூறு கேள்விகளை கேட்டதாகவும், அதனால் தூண்டப்பட்ட அந்நபர் முதல்வர் ரேவந்த் ரெட்டியை தகாத வார்த்தைகளால் தாக்கிப் பேசியதை விடியோ பதிவு செய்து 'நிப்புகொடி' எனும் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ மூலம் தவறான செய்திகள் மற்றும் முதல்வர் குறித்து அவதூறுகளை பரப்ப முயற்சித்துள்ளதாகவும் இதனால் மாநிலத்தின் சமூக நல்லிணக்கம் பாதிக்கபட வாய்ப்புள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 லேப்டாப்கள், 2 ஹார்டு டிஸ்க், பல்ஸ் மீடியா சின்னம் பொறிக்கப்பட்ட மைக் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

முன்னதாக, தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரேவதி என்பவர் கடந்த ஆண்டு (2024) ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தகாத வார்த்தைகளினால் திட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். மேலும், தெலங்கானா மாநில மின் விநியோக நிறுவனம் குறித்து தவறான செய்திகள் பரப்பியதற்காக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் பத்திரிக்கையாளரான தன்வி யாதவ் தெலங்கானா அரசு மற்றும் முதல்வர் குறித்து தொடர்ந்து அவதூறு விடியோக்களை பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web