கண்டெய்னர் லாரி கவிழ்ந்து சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் உடல் நசுங்கி பலி.!

 
கண்டெய்னர் லாரி

 திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக வேகம் அல்லது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஆம்புலன்ஸ்

இதில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கண்டெய்னர் லாரி விழுந்ததில்  லாரிக்கு அடியில் சிக்கி உள்ள பெண்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. உடனடியாக உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, லாரியின் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ்
இருப்பினும், இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 2  பெண்கள் கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தாக உறுதி செய்யப்பட்டது. விபத்து காரணமாக, திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது