கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது... பைக் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து பைக்கைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் வெள்ளப்பட்டி செக்போஸ்ட் நூலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் பைக்கில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் வெள்ளப்பட்டி 25 வீடு மீனவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆலோசனை மரியான் மகன் மரிய விக்டர் (19), செல்வராஜ் மகன் மைக்கேல் விஜிஸ்டன் (19) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
