தண்டவாளத்தில் சிக்கிய இரு சக்கர வாகனம்.. 10 கி.மீ. இழுத்து சென்ற துயரம்... உரிமையாளரைத் தேடும் போலீஸ்!

 
டூ வீலர்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மர்ம நபர் ஒருவர், விரைவு ரயில் வருவதைக் கண்டு தனது இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றதால், ரயில் மோதி அந்த வாகனம் சேதமடைந்தது. 

எக்ஸ்பிரஸ் ரயில்

ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் விரைவு ரயில், நேற்றிரவு 9.55 மணியளவில் உச்சிப்புளி ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற மர்ம நபர் ஒருவர், ரயில் வருவதைக் கண்டு பீதியடைந்து வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார். தண்டவாளத்தில் கிடந்த அந்த இரு சக்கர வாகனம் மீது ரயில் மோதியதில், அது சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது. விபத்து காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் உதவியுடன் ரயில் முன்பகுதியில் சிக்கியிருந்த வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, ரயில் மீண்டும் புறப்பட்டது.

ரயில் எக்ஸ்பிரஸ்

இது குறித்து ரயில் ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில், ராமேசுவரம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த இரு சக்கர வாகனத்தைக் கைப்பற்றினர். வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, அதன் உரிமையாளரைத் தேடி வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!