தவெக கட்சியின் முதல் வேட்பாளர் - திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் அறிமுகம்?!

 
திருச்செங்கோடு அருண்ராஜ்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கானப் பூர்வாங்கப் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் தவெக வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நம்பகமானத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக

தவெக தலைவர் விஜய், கட்சியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களைத் தனித்தனியாக நேர்காணல் செய்த பின்னரே அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவிப்பார் என்று கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக, அனைத்துத் தொகுதிகளிலும் கட்சிக்குத் தொகுதிப் பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொருத் தொகுதியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்திப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தப் பொறுப்பாளர்கள் நியமன ஆலோசனைக் கூட்டம் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி வாரியாக இருக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்குத் தேர்தல் பணிகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.

தவெக விஜய்

முதல் கட்டமாக நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்று (டிசம்பர் 14) திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தான் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் தவெக வேட்பாளராகக் கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், சட்டமன்றத் தேர்தலை நோக்கிய தவெகவின் முதல் அதிகாரப்பூர்வ நகர்வு இதுவாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!