"ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி தான்!" - அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அண்ணா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் வரிசையில், "மு.க. ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி தான்" என்று சுட்டிக்காட்டியுள்ளது, திமுகவின் வாரிசு அரசியல் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில், 91 தொகுதிகளைச் சேர்ந்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார். "சிறிய அளவில் நண்பர்களோடு அமர்ந்து ஆரம்பிக்கப்பட்டது திமுக இளைஞரணி. இப்போது பரந்து விரிந்து ஆலமரமாக மாறியிருக்கிறது. பேசுவதை விட இந்த கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நினைக்கத் தோன்றுகிறது.
அண்ணாவின் புகழ் வரிசையில் கருணாநிதி இருந்தார். கருணாநிதியை மிஞ்சும் புகழ் வரிசையில் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். மு.க. ஸ்டாலினுக்கு அடுத்து யார் என்ற கேள்விக்கு பதில் உதயநிதி தான்.

"திமுகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. வலுவான தலைமை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறது. துரைமுருகனின் இந்த வெளிப்படையான பேச்சு, திமுகவின் அரசியல் அடுத்தடுத்த கட்டப் பயணத்தை உறுதிப்படுத்துவதுடன், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் கட்சித் தயாராக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
