கோவையில் உதயநிதி ஸ்டாலின்... இன்று ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்து, வீரர்களுடன் விளையாடி உற்சாகப்படுத்துகிறார்!

 
உதயநிதி

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சுமார் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் செயற்கை புல்வெளி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் பகலில் மட்டுமின்றி இரவிலும் போட்டிகளைத் தடையின்றி நடத்தும் வகையில் 6 உயர்மின் கோபுர விளக்குகள்நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோபுரத்திலும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  சர்வதேச தரத்திலான இந்த ஹாக்கி மைதானம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இன்று உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

ஹாக்கி

மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு கம்பிவேலிகள், வீரர்-வீராங்கனைகளுக்கான நவீன உடை மாற்றும் அறைகள், ஓய்வறைகள் மற்றும் தடையற்ற குடிநீர் வசதிக்காகப் பிரத்யேக நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெறும் திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்த பிறகு, சிறிது நேரம் ஹாக்கி விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

ஹாக்கி

இதனைத் தொடர்ந்து நடைபெறும் அரசு விழாவில், பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 10,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் உரையாற்றுகிறார்.

இந்த புதிய மைதானம் கோவையில் ஹாக்கி விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை இங்கு நடத்த வழிவகை செய்யும் என்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!