தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி நடைபோடுவதில் பெருமகிழ்ச்சி .... உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி நடைபோடும் என முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார். இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட_மாடல் அரசின் சீரிய நடவடிக்கைகளால் நாட்டிலேயே அதிகபட்சமாக 9.69% வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது. ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் காட்டும் பாரபட்சத்துக்கு நடுவே, நம் முதலமைச்சர் அவர்கள் தீட்டிய திட்டங்களின் வெற்றிக்கு இந்தப்புள்ளிவிவரமே சாட்சி. தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கை நோக்கி நடைபோடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். நம் முதல்வரின் கரங்களை மேலும் வலுப்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!