யாரும் தவறாக பயன்படுத்த முடியாது... புதிய யுஜிசி விதிமுறைகள் குறித்து தர்மேந்திர பிரதான்!
யுஜிசி புதிய விதிமுறைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். எந்தவித பாகுபாடும் இருக்காது என்றும், சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
बरेली सिटी मजिस्ट्रेट अलंकार अग्निहोत्री ने UGC के नए नियम से आहत होकर नौकरी से इस्तीफ़ा दे दिया
— Harsh Bisaria (@HarshBisaria) January 26, 2026
ये फ़ैसला अग्निहोत्री जी के लिए इतना आसान नहीं था जितना लगता है
इसके लिए बहुत बड़ा कलेजा चाहिए
सवर्ण समाज आपका आभारी रहेगा#UGC_RollBack #UGCRegulations #UGC_काला_कानून_वापस_लो pic.twitter.com/y8tHJPk1qi
இந்த விதிமுறைகளில் “சாதி அடிப்படையிலான பாகுபாடு” என்ற சொல்லின் விளக்கம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள யுஜிசி தலைமையகத்தின் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் விடுதிகளில் ஏற்பட்ட தொடர் எதிர்ப்புகளால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
#WATCH | On new regulation of UGC, Union Education Minister Dharmendra Pradhan says," I assure everyone there will be no discrimination and no one can misuse the law." pic.twitter.com/0ZRgWaU76H
— ANI (@ANI) January 27, 2026
புதிய விதிகளின்படி, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சம வாய்ப்பு மையம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர். இந்த விதிமுறைகள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, #ShameonUGC என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
