அட... நாகேஷ் , சமுத்திரக்கனி வரிசையில் படம் முழுக்கவே பிணமாக நடித்த நாயகி... !

 
ரூபா

திரையுலகை பொறுத்தவரை உயிரிழந்த சடலமாக நடிக்க வேண்டும் என்றாலே பொதுவாக தயங்குவார்கள்.  காரணம், இறப்பதுபோன்ற காட்சிகள் இருந்தால் கதாபாத்திரம் பலமாக இருக்காது என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. அதிலும் படம் முழுக்கவே  பிணமாகத்தான் நடிக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும்?  

எமகாதகி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை   'மகளிர் மட்டும்' படத்தில் நடிகர் நாகேஷ் அப்படி நடித்தார்.அதன்பின், ஏலே படத்தில் சமுத்திரக்கனி பெரும்பான்மையான காட்சிகளில் பிணமாக நடித்து பாராட்டுகளையும் பெற்றார். 

இந்த வரிசையில், தற்போது நாயகி ஒருவர் நடித்துள்ளார். மார்ச் 7ம் தேதி   வெள்ளிக்கிழமை  எமகாதகி படத்தின் நாயகியான ரூபா கொடுவாயூர் இப்படத்திற்காக 20 நாள்கள் பிணமாக நடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


ஆந்திரத்தைச் சேர்ந்த ரூபா தெலுங்கில் 'உமா மகேஸ்வரா உக்ர ரூபசயா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி சிறந்த நடிகைக்கான சைமா விருதை வென்றவர்.எமகாதகி படத்தின் கதையைக் கேட்டதும் பிடித்துப்போக உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ரூபா  பிணமாக நடித்ததற்குப் பின் அக்கதாபாத்திரத்தின் போராட்டமான வாழ்க்கையும் பேசப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web