அட... ஷாப்பிங் செய்ய பணமோ, கார்டோ தேவையில்லை... கையை மட்டும் காட்டினால் போதும்!

நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அசுரத்தனமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் சீனா கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக அளவில் முன்னணியில் வலுவாக மாறி வருகிறது. அதன்படி ஹ்யூமனாய்டு ரோபோக்கள் முதல் சுகாதார முறைமைகள் வரை பல துறைகளில் தொழில்நுட்பங்களை புதுப்பித்து வருகிறது. சீனா, தற்போது “பேமெண்ட் பை பால்ம்” எனும் தொழில்நுட்பத்தை பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது.
இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கடையில் ஸ்பார்க்லிங் வாட்டர் வாங்கிய ஒருவர் கையை ஸ்கேன் செய்து அதன்மூலம் WeChat ஐடி வழியாக பணம் செலுத்துகிறார். அவரிடம் கார்டோ, பணமோ, தொலைபேசியோ இல்லாமலே நடைபெறுவது நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வரும் நிலையில் இந்தியாவின் UPI மற்றும் Paytm செயலிகள் மற்றும் சீனாவின் கை மூலம் அடையாள பணப்பரிமாற்ற முறை இடையே ஒப்பீடுகளும் கிளம்பின.“இந்தியாவில் கூட 10 ரூபாய் கொத்தமல்லிக்கே Paytm பயன்படுத்துகிறோம். இந்தியாவும் டிஜிட்டல் பேமெண்ட்டில் பிற நாடுகளுக்கு முன் இருக்கிறது” என பதிவிட்டுள்ளனர்.
2023 மே மாதம் அறிமுகமான Weixin Palm Recognition சேவை, பீஜிங் விமான நிலைய எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஷென்ழென் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் இது குவாங்டோங் மாகாணத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட 7-Eleven கடைகளில் பரவியது.
தற்போது, இத்தொழில்நுட்பம் power bank வாடகை நிலையங்கள், ரீடெயில், போக்குவரத்து, உடற்பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி துறைகளிலும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. பயனர்கள் ஒரு மொபைல் ஆப்பில் பதிவு செய்து, கையை ஸ்கேனரில் ஒத்திசைத்தால், உடனே பணம் செலுத்தலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!