உக்ரைன் மீது ரஷியத் தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு!
உக்ரைன் ரஷ்யா போர் 2022 ம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று பல்வேறு முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷியா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட பகுதிகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நள்ளிரவு ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலால் அங்குள்ள பல குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 29 ஏவுகணைகள் மற்றும் 480 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை சுவிட்சர்லாந்து அல்லது துருக்கியில் நடத்தலாம் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
