டிரோன் தாக்குதலில் பற்றி எரிந்த ரயில்… உக்ரைனில் தொடரும் போர் கொடூரம்!
உக்ரைன் நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022 பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் நடப்பு ஆண்டு பிப்ரவரியுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. ஆனால் இன்னும் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த போரால் வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர். பலர் நாடுகளை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர்.

போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் கார்கீவ் நகரில் சென்ற பயணிகள் ரெயில் மீது ரஷிய டிரோன்கள் திடீரென தாக்குதல் நடத்தின. இதில் ரெயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. சுமார் 200 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன்பு ஒடிசா நகரில் உள்ள கருங்கடல் துறைமுகப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்ததுடன், 2 குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 5 அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன. குளிர்காலத்தில் மக்கள் கடும் அவதியில் உள்ள நிலையில், மின்சார வசதிகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
