30 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் சம்மதம்!

 
உக்ரைன்


உக்ரைன், ரஷியா இடையேயான போர்  3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப்போர் தொடங்கி இன்றுடன் 1112வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேவேளை, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுத்தும் வருகிறார். 

உக்ரைன் போர்

அந்த வகையில் அந்நாட்டிற்கு வழங்கி வந்த ராணுவ உதவி, உளவு தகவல்களை அமெரிக்கா நிறுத்திவிட்டதாக அறிவித்தது.  மேலும், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ரஷியா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்ததையடுத்து அந்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட ராணுவ உதவி, உளவு தகவல்களை மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

ரஷ்யா - உக்ரைன்

30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. அதேவேளை, தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. போரை தற்காலிகமாக நிறுத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துவரும் உக்ரைன் - ரஷியா போர் தற்காலிகமாக நிறுத்தப்படும். அமைதி மெல்ல மெல்ல திரும்பும் என இருநாட்டு மக்களும் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web