புதினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகை!

 
உக்ரைன்
 

ரஷ்யா–உக்ரைன் போர் பின்னணியில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022 பிப்ரவரி முதல் தொடரும் இந்த போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ரஷ்யா 23-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்தும் இரு தலைவர்கள் விரிவாக பேசியதாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போர் முடிவுக்கான சமரச முயற்சிகளில் இந்தியாவின் பங்கு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டெல்லி வர திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான தேதியை இறுதி செய்ய இந்தியா–உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா போர் நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ள நிலையில், அந்த திட்டத்தை ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ஜெலன்ஸ்கியின் இந்திய பயணம், உலக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!