நாளை மறுநாள் திரௌபதி முர்மு கன்னியாகுமரி வருகை!! உச்சகட்ட பாதுகாப்பு!!

 
திரௌபதி முர்மு

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த மாதம் கோவை மற்றும் மதுரை வந்திருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த மாதம் மார்ச் 18ம் தேதி சனிக்கிழமை நாளை மறுநாள் கன்னியாகுமரி வருகை புரியவுள்ளார். இதனை முன்னிட்டு அம்மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக  தற்போது கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்று வருகிறது.அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன் முறையாக  மார்ச் 18ம் தேதி கன்னியாகுமரி வருகை புரியவுள்ளார்.  

திரவுபதி முர்மு

மார்ச்18ம் தேதி  காலை 12.30 மணிக்கு கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகு மூலம்  சுற்றி பார்க்கிறார்.  அதன் பிறகு கன்னியாகுமரி சுற்றுலா மண்டபத்திற்கு செல்ல இருக்கிறார். மாலை 3 மணிக்கு விவேகானந்தா கேந்திரா சென்று ராமாயண தரிசன சித்திர கூடத்தை பார்வையிடுகிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு  வருகையை முன்னிட்டு தற்போது கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திரௌபதி முர்மு

இதற்காக தற்போது கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை  நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் பார்வையிடப்படவுள்ள பகுதிகளை அதிகாரிகள் நேரடியாக களஆய்வு செய்து  வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web